மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
விஷால் மலையாளத்தில் முதன்முதலாக நடித்துவரும் படம் தான் 'வில்லன்'. விஷால் மட்டுமல்ல, ஹன்சிகாவும் இந்தப்படத்தின் மூலம் மலையாளத்தில் நுழைந்துள்ளார். மெயின் ஹீரோவாக மோகன்லால் நடிக்கிறார். இந்தப்படத்தில் மோகன்லால் ரிட்டையர்டு போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனர் பி.உன்னிகிருஷ்ணன் இந்தப்படத்தை இயக்குகிறார். விஷால் வில்லனாக நடிப்பதாக சொல்லப்பட்டு வந்தாலும் அவரது கேரக்டர் பற்றிய சஸ்பென்ஸ் இன்னும் நீடிக்கவே செய்கிறது.
இந்தப்படத்தில் விஷால்-மோகன்லால் சம்பந்தப்பட்ட இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. சமீபத்தில் விஷால் மோகன்லாலுடன் மலையாள நடிகர் இந்திரஜித்தும் இணைந்திருப்பது போன்ற ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ ஒன்று சோஷியல் மீடியாவில் வெளியானது. இதனால் இந்தப்படத்தில் இந்திரஜித் முக்கிய வேடத்திலோ அல்லது அட்லீஸ்ட் கெஸ்ட் ரோலிலோ நடிக்கிறார் என செய்திகள் கிளம்பின. ஆனால் இந்திரஜித்தோ, நானும் விஷாலும் நீண்ட நாள் நண்பர்கள், அவரை சந்தித்துவிட்டு வரலாம் என்று தான் 'வில்லன்' பட ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்றேன். மற்றபடி, இந்தப்படத்தில் நான் நடிக்கவில்லை” என விளக்கம் கூறியுள்ளார்.