டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
'பைரவா' படத்திற்குப் பிறகு விஜய் நடிக்கும் புதிய படத்தை அட்லீ இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில் சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்படத்தின் முதல் பார்வையை விஜய் பிறந்த நாளான ஜுன் 22ம் தேதியன்று வெளியிட உள்ளார்கள்.
படத்தின் தலைப்பு என்ன என்பதைத் தெரிந்து கொள்வதிலும், விஜய்யின் தோற்றத்தைத் தெரிந்து கொள்வதிலும் விஜய் ரசிகர்கள் மிகவும் ஆவலாக உள்ளார்கள். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகவே விஜய்யின் பிறந்த நாளைக் கொண்டாடி வரும் அவரது ரசிகர்கள், டுவிட்டரில் அடிக்கடி டிரென்டிங்கை ஏற்படுத்தி வருகின்றனர்.
விஜய் 61 படத்தின் தலைப்பும், முதல் பார்வையும் மோஷன் போஸ்டராக வெளிவந்தால் அவற்றையும் அதிகப் பார்வைகளைப் பெறும் அளவிற்கு சமூக வலைத்தளங்களில் பரப்பிவிட தயாராக இருக்கிறார்கள்.
அஜித் நடித்து வெளிவந்த 'விவேகம்' படத்தின் டீசர் புதிய சாதனையைப் படைத்துள்ள நிலையில், அடுத்து வந்த மகேஷ் பாபுவின் 'ஸ்பைடர்' டீசரும் சாதனை செய்து, விஜய் படங்களின் முந்தைய சாதனைகளை முறியடித்துள்ளதால், விஜய் 61 படம் மூலம் மீண்டும் புதிய சாதனையைப் படைக்க காத்துக் கொண்டிருக்கிறார்கள்.