டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மணிரத்னம் இயக்கிய ராவணன் படத்தில் இருந்த கேரக்டர் நடிகராக உருவெடுத்தவர் கார்த்திக். அதன்பிறகு மாஞ்சா வேலு, புலிவேஷம், அனேகன் ஆகிய படங்களில் நடித்தார். இதில் தனுஷின் அனேகன் படத்தில் வில்லனாக நடித்தார் கார்த்திக். அதைத்தொடர்ந்து ஏற்கனவே அவர் நடித்த அமரன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் அந்த படம் பைனான்ஸ் பிரச்சினையால் கைவிடப்பட்டது.
இந்த நிலையில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் "தானா சேர்ந்த கூட்டம்" படத்தில் முதன்முறையாக அவருடன் இணைந்து நடிக்கிறார் கார்த்திக். இந்த படத்தில் சூர்யாவுடன் கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், ஆனந்தராஜ், செந்தில், கோவை சரளா, தம்பிராமைய்யா, சரண்யா, ஆர்.ஜே.பாலாஜி, சத்யன் என பலரும் இதுவரை நடித்து வந்த நிலையில், தற்போது சூர்யாவுடன் இணைந்து கார்த்திக் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த படத்தில் கார்த்திக் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அனேகன் படத்தில் வில்லனாக நடித்த கார்த்திக், இந்தப்படத்தில் இன்னுமொரு மிரட்டல் ரோலில் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.