'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் |
சசிகுமார் நடித்த பிரம்மன் படத்தில் தமிழுக்கு வந்தவர் லாவண்யா திரிபாதி. அந்த படம் வெற்றி பெறாததால் அடுத்து தெலுங்கிற்கு சென்ற அவர் அங்கு பல படங்களை கைப்பற்றி பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். நாகார்ஜூனா, அல்லு சிரிஷ், வருண்தேஜ், சர்வானந்த் என நடித்து வந்த லாவண்யா திரிபாதி, தற்போது தமிழ், தெலுங்கில் சி.வி.குமார் இயக்கியுள்ள மாயவன் படத்தில் சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.
இந்த நிலையில், சிவராஜ்குமார், சுதீப் நடிக்கும், தி வில்லன் என்ற கன்னட படத்தில் நடிக்கும் லாவண்யா திரிபாதி, ராரன்டோவ் வேடுக சுதம் படத்தைத் தொடர்ந்து நாக சைதன்யா நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாகியிருக்கிறார். ஆந்திராவிலுள்ள அராகு பகுதியில் தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஆக, ஒரேநேரத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் நடித்து வருகிறார் லாவண்யா திரிபாதி. முக்கியமாக, நாக சைதன்யாவுடன் அவர் நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் அம்மா வேடத்தில் நடிகை ரேவதி நடிக்கிறார்.