பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மகேஷ்பாபு நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் படம் ஸ்பைடர். உளவுத்துறை அதிகாரியாக மகேஷ்பாபு நடிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கில் தயாராகிறது. ராகுல் பிரீத்சிங், எஸ்.ஜே.சூர்யா, பரத், நதியா, ஆர்.ஜே.பாலாஜி உள்பட பலர் நடித்து வரும் இந்த படம் செப்டம்பர் 27-ந்தேதி திரைக்கு வருவதாக ஏற்கனவே அறிவித்து விட்டனர்.
மேலும், இந்த படத்தின் தலைப்பையே 75 சதவிகிதம் படப்பிடிப்பு முடிந்த நிலையில் அறிவித்த முருகதாஸ், படத்தின் டீசரை சமீபத்தில் வெளியிட்டார். அதற்கு மகேஷ்பாபு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. முக்கியமாக, டீசரில் இடம்பெற்ற கிராபிக்ஸ் ஸ்பைடர் அனைவரையும் கவர்ந்தது.
இந்த நிலையில், ஸ்பைடர் படத்தின் டிரைலர் ஆகஸ்ட் மாதம் 9-ந்தேதி வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதோடு, டீசரில் கிராபிக்ஸ் ஸ்பைடர் தோன்றி இன்ப அதிர்ச்சி கொடுத்தது போன்று டிரைலரில் இன்னும் பல இன்ப அதிர்ச்சிகள் காத்திருக்கிறதாம். இதனால் மகேஷ்பாபுவின் ரசிகர்கள் ஸ்பைடர் படத்தின் டிரைலரை வரவேற்க இப்போதே தயாராகி விட்டனர்.