ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கிட்டத்தட்ட முப்பது வருட காலமாக திரையுலகில் தவிர்க்க முடியாத ஒரு இடத்தை தனக்கென தக்கவைத்து கொண்டுள்ளார் நடிகர் ரகுமான். மலையாள சினிமாவின் மார்கண்டேயன் என சொல்லும் விதமாக ஐம்பது வயதானாலும் கூட இன்னும் இளமை துடிப்புடன் படங்களில் நடித்து வருகிறார் ரகுமான். ஆனால் முன்பு போல கன்னாபின்னாவென படங்களை ஒப்புக்கொள்ளாமல் செலக்டிவாக படங்களை தேர்ந்தெடுக்கும் ரகுமானின் கலையுலக வாரிசாக அவரது மூத்த மகள் ருஷ்தாவும் சினிமாவில் களம் இறங்குகிறார்.
மலையாள சினிமாவில் வாரிசுகள் ஹீரோக்களாக மட்டும் அல்ல, ஹீரோயின்களாகவும் திரையுலகில் நுழைவது சகஜமாகிவிட்டது. ரகுமானின் இரண்டு மகளிகளில் மூத்தவரான ருஷ்தா எம்.பி.ஏ படிப்பு முடித்தவர்.. இளையமகள் அலிஷா ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இருவரும் திரையுலகில் நுழைய விரும்புகிறார்களாம்.. அது அவர்கள் விருப்பம் தானே தவிர, ரகுமான் இதில் எந்தவிதத்திலும் தலையிடவில்லையாம். அனேகமாக துல்கரின் ஜோடியாக ருஷ்தாவை அறிமுகப்படுத்தும் வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன என்று தெரிகிறது.