‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
தெலுங்கில் ரவிதேஜா, அல்லு அர்ஜூன், ஜூனியர் என்டிஆர், ராம்சரண் என பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து விட்ட ராகுல்பிரீத்சிங், தற்போது மகேஷ்பாபுவுடன் ஸ்பைடர் படத்தில் நடித்து வருகிறார். இந்த நடிகர்களுடன் அவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட்டானதால் தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாகி விட்டார் ராகுல்பிரீத்சிங். அதோடு அவரது சம்பளமும் ஒரு கோடியை கடந்து எகிறிப்போய்க் கொண்டிருக்கிறது.
இந்தநிலையில், ஸ்பைடர் படத்தைத் தொடர்ந்து கார்த்தி நடிக்கும் தீரன் அதிகாரம் ஒன்ற படத்திலும் நடித்து வரும் ராகுல் பிரீத்சிங்கிற்கு அடுத்தபடியாக தமிழிலும் அழுத்தமாக காலூன்ற வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. அதேசமயம், பவன் கல்யாணுடன் டூயட் பாட வேண்டும் என்பது அவரது நீண்டநாள் ஆசையாம். மார்க்கெட் உச்சத்தில் இருக்கும்போதே அவருடன் நடித்து விட வேண்டும் என்பதால், பவன் கல்யாணுடன் நடிக்க எந்த இயக்குனர் கால்சீட் கேட்டாலும் உடனடியாக தருவதற்கு தயாராக இருப்பதாக டோலிவுட்டில் செய்தி வெளியிட்டிருக்கிறார் ராகுல்பிரீத்சிங்.