பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
ரஜினிகாந்த் அண்மையில் தனது ரசிகர்களை சந்தித்தபோது, முதல் நாளே, "ஆண்டவன் விரும்பினால் அரசியலுக்கு வருவேன்" என்றார். கடைசி நாளில், "போர் வரும்போது அதை எதிர்கொள்வோம்" என்று சஸ்பென்ஸ் வைத்தார்.
அதோடு தனக்கு நெருக்கமான பிரமுகர்கள், அரசியல்கட்சித்தலைவர்கள், பத்திரிகையாளர்களை சந்தித்து தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை செய்து வருகிறார். இதை எல்லாம் வைத்து ரஜினி விரைவில் அரசியலுக்கு வர இருக்கிறார் என்ற கூறப்படுகிறது. ஏற்கனவே ரஜினி, தன் கட்சிக்கான கொடி மற்றும் கட்சியின் பெயர் ஆகியவற்றுக்கான பணிகளை துவக்கிவிட்டார். சுதந்திர தினத்தில் கட்சியின் பெயர் அறிவிக்கப்பட இருப்பதாக முன்பு செய்தி வெளியானது.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த், அவரது பிறந்தநாளன்று, அதாவது வரும் டிசம்பர் 12-ம் தேதி தனது அரசியல் பிரவேசத்தை அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அன்றைய தினம் தனது ரசிகர்களை சந்தித்து அரசியல் பிரவேசத்தை அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது காலா படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வரும் ரஜினி, அந்தப்படத்தை முடித்த கையோடு அரசியல் கட்சி தொடர்பான பணிகளில் முழுமூச்சாக ஈடுபடுவார் என்றும் சொல்லப்படுகிறது.