சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
டார்லிங் படம் மூலம், தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நிக்கி கல்ராணி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என, தென் மாநில சினிமாக்களில் வெற்றிகரமான நடிகையாக வலம் வருகிறார். திரையுலகிற்கு வந்த குறுகிய காலத்திலேயே, 25வது படத்தில் நடித்து சாதித்துள்ளார். தன், 25வது படமான மரகத நாணயம் படம் வெளிவரும் நிலையில், நிக்கி கல்ராணி அளித்த பேட்டி:
அது என்ன மரகத நாணயம்?
அது, ஒரு விலை மதிப்புடைய கல். அந்த கல், எப்படி கிடைக்கிறது; அது கிடைத்தவுடன் என்ன நடக்கிறது என்பது கதை. ஐந்து பேர் இந்த கதையில் இருக்காங்க; அதில், நானும் ஒருத்தி. இந்த படம், வழக்கமான கதை இல்லை. கொஞ்சம் வித்தியாசமா சிந்தித்து இருக்கார் இயக்குனர்.
பெரும்பாலான ஹீரோக்களின் மனம் கவர்ந்த ஹீரோயின் நீங்கள் தான்; அதற்கு என்ன காரணம்?
ஒட்டுமொத்த தமிழகத்திற்கும், நான் தான் மனம் கவர்ந்த ஹீரோயின். எல்லாருக்கும் என்னை பிடிச்சிருக்கு. ஹீரோ மட்டும் இல்லை; மொத்த யூனிட்டுமே என்னை கொண்டாடுவாங்க. எல்லாருடனும் ஈசியா பழகுவேன்.
படப்பிடிப்பில் ரகளை பண்ணுவீங்களாமே?
விஷ்ணு விஷால், விக்ரம் பிரபு, ஆதி இப்படி பல ஹீரோக்கள் படங்களில், இரண்டாவது முறையாக நடிச்சிருக்கேன். அவங்க என்னோட எப்பவும் நட்பாக இருப்பாங்க. ஹீரோயின் என்ற பந்தா எதுவும் என்னிடம் இருக்காது. கேமரா முன், நிறைய நடிச்சிட்டு இருக்கோம்; நிஜ வாழ்க்கையிலும் நடித்தால், நம்மால், நம்மை உணர முடியாது. அதனால், நான் நானாகவே இருப்பேன்.
ரொம்ப சீக்கிரம், 25 படங்களில் நடிச்சிட்டீங்க; அந்த ரகசியம் என்ன?
என் வேலையை, நான் மனதார நேசிப்பது தான், இதற்கு காரணம். என்னால், வீட்டில் சும்மா உட்கார்ந்து இருக்க முடியாது. வேலையை தவிர, வேறு எதிலும் கவனம் செலுத்த மாட்டேன். அது தான் ரகசியம்.
ஒரே மாதிரி படங்கள், ஒரே மாதிரி நடிப்பு ரசிகர்களுக்கு, போர் அடிக்குமே?
நான், நடிக்க தேர்ந்தெடுக்கும் படங்கள் எல்லாமே, வித்தியாசமான கதை தான். ஒவ்வொரு படமும், வேறு வேறு கதையா இருந்தால் மட்டுமே நடிக்க சம்மதிப்பேன். சவாலான கதாபாத்திரங்களில் நான் நடிக்க விரும்புகிறேன்.
முன்னணி நடிகர்களுடன் எப்போது நடிப்பீங்க?
எனக்கும் பெரிய நடிகர்களுடன் நடிக்க ஆசை இருக்கு. அதற்கு சரியான டீம் மற்றும் கதை அமைய வேண்டும்; அதற்கான நேரம் காலம், சரியாக அமைய வேண்டும்.
உங்களால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்கள்?
சாப்பாடு விஷயத்தில், என்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது. இது மாதிரி நிறைய விஷயங்கள் இருக்கு.
நீங்க யாரை போல நடிக்கிறீங்க?
சொன்னால் சிரிக்கக் கூடாது. ஜோதிகா மேடம் மாதிரி இருக்கேன்; துருதுருன்னு நடிக்கிறேன். அவங்க நடிக்கிற மாதிரியே இருக்கு என, பலர் என்னை பாராட்டியிருக்காங்க.
மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் பாடல் காட்சியில், அதிக கவர்ச்சியாக நடித்ததாக விமர்சனம் இருக்கே?
ஒரு உண்மையை சொல்கிறேன்; அந்த பாடல் எடுக்கும் நேரத்தில், என் காலில் பெரிய காயம். என்னால் ஆட முடியவில்லை. ஆனால், அந்த பாடலை, ஹிட் கொடுக்க வேண்டும் என்ற வெறி இருந்தது. குறைவான உடையணிந்து நடித்தால் அது, கிளாமர் இல்லை. ஒரு பொண்ணு, சுடிதாரில், புடவையில் கூட கிளாமராக தெரியலாம். என் படத்தை, அனைவரும் குடும்பத்தோடு உட்கார்ந்து பார்க்கணும் என, நினைக்கிறேன்.
சம்பளத்தை உயர்த்தி விட்டீர்களா?