'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலிவுட்டின் பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யாப். இன்றைக்கு பாலிவுட்டின் ஹாட் டாப்பிக்கும் இவர் தான். அனுராக்கிற்கு ஏற்கனவே ஆர்த்தி பஜாஜ், நடிகை கல்கி கோச்சலின் என இரண்டு பேருடன் திருமணம் நடந்து, விவாகரத்து ஆன நிலையில், இப்போது மூன்றாவது திருமணத்திற்கு ரெடியாகிவிட்டார். தற்போது இவர் 22 வயதே ஆன இளம் பெண்ணான சுப்ரா ஷெட்டியுடன் நெருக்கம் காட்டி வருகிறார். இருவரும் காதலிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் இப்போது இருவரும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருவது, இருவரும் காதலிப்பதை உறுதி செய்வதாகவே தெரிகிறது. அனுராக்கிற்கும், சுப்ராவிற்கும் சுமார் 20 வயது வித்தியாசம் என்பது குறிப்பிடத்தக்கது.