இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஜூன் 23-ம் தேதி அன்று தான் நடித்த கதாநாயகன் படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தார் விஷ்ணுவிஷால். அதே தினத்தில் வனமகன், ஏஏஏ உட்பட பல படங்கள் வெளியாக இருப்பதாக சொல்லப்பட்டு வருவதால் கதாநாயகன் படத்தின் ரிலீஸை தள்ளி வைத்துவிட்டார் விஷ்ணு விஷால்.
மாவீரன் கிட்டு படத்தை முடித்துவிட்டு, புதுமுக இயக்குநர் முருகானந்தம் இயக்கத்தில் கதாநாயகன் என்ற படத்தில் நடித்து வந்தார் விஷ்ணு விஷால். கேத்தரீன் தெரசா, சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் விஷ்ணு விஷாலுடன் இணைந்து நடித்துள்ளார்கள்.
விஷ்ணு விஷாலே தயாரித்துள்ள இப்படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதமே முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில், கதாநாயகன் படம் ஜூன் 23-ம் தேதி வெளியாகும் என விஷ்ணு விஷால் தெரிவித்திருந்தார்.
தற்போது, ஜூன் 23-ம் தேதி நிறைய படங்கள் வெளியாவதால் தன்னுடைய படத்துக்கு போதிய தியேட்டர்கள் கிடைக்காது என்பதால் கதாநாயகன் படத்தின் வெளியீட்டை காலவரையின்று ஒத்தி வைத்துள்ளார். கதாநாயகன் படத்தைத் தொடர்ந்து முண்டாசுப்பட்டி ராம் இயக்கத்தில் உருவாகும் மின்மினி என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார் விஷ்ணு விஷால்.