வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
'சைத்தான்' படத்தை தொடர்ந்து அறிமுக இயக்குனர் சீனுவாசன் இயக்கும் 'அண்ணாதுரை' என்ற படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தார் விஜய் ஆண்டனி. ராடன் மீடியா தயாரிப்பில் தொடங்கப்பட்ட அண்ணாதுரை படம் ஆரம்ப நிலையிலேயே ட்ராப் பண்ணப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
அதை உண்மையாக்குவது போல், அண்ணாதுரை படத்தில் நடிப்பதற்காக ஒதுக்கிய கால்ஷீட்டை 'காளி' படத்துக்கு ஒதுக்கினார். கிருத்திகா உதயநிதி இயக்கும் 'காளி' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 'வணக்கம் சென்னை' படத்தை தொடர்ந்து கிருத்திகா உதயநிதி இயக்கும் 'படம் இது.
விஜய் ஆண்டனியின் 'விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன்' காளி படத்தை தயாரித்து வருகிறது. தன்னுடைய மனைவி இயக்கும் காளி படத்தை வாங்கிய வெளியிட தயாராக இருக்கிறார் உதயநிதி.
டிராப் பண்ணப்பட்டதாக சொல்லப்பட்ட 'அண்ணாதுரை' பட வேலைகள் பல பிரச்சனைகளை கடந்து தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அனேகமாக ராடன் மீடியாவை கழற்றிவிட்டு தானே தயாரிக்கும் முடிவில் விஜய் ஆண்டனி இருப்பதாக தகவல்.