விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் |
தமிழில் அடங்காதே படத்தில் ஜி.வி.பிரகாஷின் அண்ணனாக அரசியல்வாதி வேடத்தில் நடித்து வருகிறார் சரத்குமார். அதையடுத்து தெலுங்கில் ஸ்பைடர் படத்தை அடுத்து மகேஷ்பாபு நாயகனாக நடிக்கும் பாரத் அனி நேனு என்ற படத்தில் அவரது தந்தை வேடத்தில் நடிக்கிறார். கொரட்டல்ல சிவா அந்த படத்தை இயக்குகிறார்.
அதேபோல், தெலுங்கில் தற்போது டிஜே துவ்வாத ஜெகன்னாதம் படத்தில் நடித்து வரும் அல்லு அர்ஜூன் அடுத்து நடிக்கும் நா பேரு சூர்யா என்ற படத்திலும் நடிக்கிறார் சரத்குமார். இந்த படத்தில் நடிகர் அர்ஜூனும் முக்கிய ரோலில் நடிக்கிறார். இவர்கள் இருவரும் நெகடீவ் வேடங்களில் நடிப்பதாக செய்திகள் வெளியான போதும் அதை படக்குழு உறுதிப்படுத்தவில்லை. மேலும், இரண்டு முன்னணி கோலிவுட் நடிகர்கள் அப்படத்தில் நடிப்பதால், தமிழிலும் நா பேரு சூர்யா படத்தை டப் செய்து வெளியிடுகிறார்களாம். ஆக, அனுஷ்கா நடித்த ராணி ருத்ரம்மா தேவி படத்தை அடுத்து மீண்டும் தமிழுக்கு வருகிறார் அல்லு அர்ஜூன்.