தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி படங்களை இயக்கியவர் கார்த்திக் சுப்புராஜ். அதன்பிறகு தனுஷ் நடிப்பில் ஒரு படத்தை இயக்குவதாக இருந்தார். ஆனால் இப்போதுவரை அந்த படம் தொடங்கப்படவில்லை. இந்த நிலையில், தேவி படத்திற்கு பிறகு யங் மங் சங் படத்தில் நடித்துள்ள பிரபுதேவாவை வைத்து ஒரு ரொமான்ஸ் கலந்த காமெடி படத்தை அதி வேகத்தில் இயக்கிக்கொண்டிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்கிறார்கள்.
மேலும், பிரபுதேவா படத்தை இயக்கி வரும் அதேவேளையில், தனது ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் சார்பில் மேயாத மான் என்றொரு படத்தை தற்போது சத்தமில்லாமல் தயாரித்தும் வருகிறார் கார்த்திக் சுப்புராஜ். ரத்னகுமார் என்பவர் இயக்கும் இந்த படம் காமெடி கலந்த கதையில் உருவாகிறது. வைபவ் நாயகனாக நடித்து வருகிறார். அவருடன் வேறு சில முக்கிய காமெடியன்களும் நடிக்கிறார்கள். இந்த இரண்டு படங்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை விரைவில் வெளியிடுகிறார் கார்த்திக் சுப்புராஜ்.