பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
குளோபல் இன்போடெய்ன்மெண்ட் நிறுவனம் இப்போது சுறுசுறுப்பான பட நிறுவனம். நாடோடிகள் படத்தில் தொடங்கி தொடர்ந்து படம் தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம் தயாரித்த மிருதன், ஈட்டி படங்கள் வெற்றி பெற்றது. தற்போது சிம்பு நடிக்கும் ஏஏஏ படத்தை தயாரித்து வருகிறது. அடுத்து நிக்கி கல்ராணி, ஜீவா நடிக்கும் கீ என்ற படத்தை தயாரிக்கிறது.
இந்த நிலையில் அதர்வாவை வைத்து ஈட்டி படத்தை தயாரித்ததை போன்று தற்போது மீண்டும் அதர்வா நடிக்க ஒரு படம் தயாரிக்கிறது. இது இந்த நிறுவனத்திற்கு 11வது படம். இதனை டார்லிங், எனக்கு இன்னொரு பேர் இருக்கு படங்களை இயக்கிய சாம் ஆண்டர்சன் இயக்குகிறார். ஹீரோயின் உள்ளிட்ட மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. இது காமெடி கலந்த ஆக்ஷன் கதை. படப்பிடிப்புகள் ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறது.
அதர்வா, தற்போது இமைக்கா நொடிககள், ஜெமினி கணேசனும், சுருளிராஜனும். செம போதை ஆகாத, ருக்குமணி வண்டி வருது, ஒத்தைக்கு ஒத்த படங்களில் நடித்து வருகிறார்.