பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், மகேஷ் பாபு தமிழில் நேரடியாக அறிமுகமாகும் படம் 'ஸ்பைடர்'. இந்தப் படத்தில் ரகுல் ப்ரீத் சிங் நாயகியாகவும், எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும், ஆர்.ஜே.பாலாஜி காமெடியனாகவும் நடிக்கிறார்கள். இப்படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளித் தள்ளிப் போய் தற்போது கடைசி கட்டத்தில் வந்து நிற்கிறது. இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்து, வரும் 17ம் தேதியுடன் நிறைவடையப் போகிறது. இந்தப் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.
'ஸ்பைடர்' படப்பிடிப்பு முடிந்ததும் மகேஷ் பாபு, அடுத்து நேரடித் தெலுங்குப் படத்தில் நடிக்க உள்ளார். 'பரத் அனி நேனு' என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு 19ம் தேதி முதல் ஐதராபாத்தில் நடைபெற உள்ளது.
மகேஷ் பாபு 'ஸ்பைடர்' படத்தில் தமிழிலும் நடித்தற்குப் பிறகு இனி, எப்போதாவதுதான் தமிழ்ப் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவார் என டோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். அதனால், விஜய், அஜித் ரசிகர்கள் யு டியூப் சாதனைகள் குறித்து பயப்பட வேண்டிய அவசியமிருக்காது.