Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ரம்ஜான் கொண்டாட்டத்தில் மம்முட்டி படம் இல்லை..!

14 ஜூன், 2017 - 16:00 IST
எழுத்தின் அளவு:
Mammootty-movie-not-releasing-in-Ramzan

மலையாள திரையுலகை பொறுத்தவரை ரம்ஜான், ஓணம், கிறிஸ்துமஸ் ஆகியவை தான் திரைப்படங்களின் கொண்டாட்ட விழாக்காலங்கள். தற்போது ரம்ஜான் நெருங்கி வருவதை அடுத்து ரம்ஜான் ரிலீஸ் ரேஸில் தங்களை இணைத்துக்கொள்ள சில படங்கள் முழு மூச்சாக செயல்பட்டு வருகின்றன. இந்த ரேஸில் மோகன்லால் படம் இல்லை என்பது ஏற்கனவே தெரிந்த விஷயம் தான். காரணம் தற்போதுதான் அவரது 'வில்லன்' பட இறுதிகட்ட படப்பிடிப்பு ஒருபுறமும் போஸ்ட் புராடக்சன் ஒருபுறமும் நடந்துகொண்டு இருக்கின்றன.. அதுமட்டுமல்ல ஜூலை-21ல் அவரது 'வில்லன்' படம் ரிலீஸாகிறது என முன்கூட்டியே அறிவித்தும் விட்டார்கள்.


ஆனால் அதேசமயம் ரம்ஜான் ரிலீஸாக மம்முட்டியின் இரண்டு படங்கள் தயாராக இருக்கின்றன என்றும் இதில் எதை முதலில் ரிலீஸ் செய்வார்கள் என்றும் எதிர்பார்த்து வந்த நிலையில் அவரது எந்தப்படமும் ரம்ஜான் பண்டிகையில் ரிலீஸ் ஆகவில்லை என்கிற தவகவல் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.. மம்முட்டி நடிப்பில் தயாராகி வரும் 'ஸ்ட்ரீட்லைட்ஸ்' படம் தமிழ், மலையாளம் என ஒரே நேரத்தில் வெளியாக இருப்பதால் அதன் போஸ்ட் புரடக்சன் வேலைகள் இன்னும் முடியவில்லையாம். அதனால் ஓணம் பண்டிகைக்குத்தான் இந்தப்படம் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in