வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
எண்பதுகளில் ரஜினி, மோகன்லால் ஆகியோருடன் கதாநாயகியாக நடித்தவர் தான் மேனகா சுரேஷ். பின்னர் தயாரிப்பாளர் சுரேஷை திருமணம் செய்து கொண்ட பின் நடிப்பை விட்டு அப்படியே ஒதுங்கிவிட்டார். இப்போது அவரது மகள் கீர்த்தி சுரேஷ், முன்னணி நடிகையாக மாறி இருக்கிறார். அவரது திரையுலக வளர்ச்சிக்கான வேலைகளில் கூடவே நிற்கும் மேனகா சுரேஷுக்கு, முன்னாள் நடிகை என்பது போய் கீர்த்தியின் அம்மா என்கிற புதிய அடையாளம் கிடைத்துள்ளது.
இந்த சமயத்தில் லிஜு கிருஷ்ணா என்கிற பெண் இயக்குனர் இயக்கியுள்ள 'இமா' என்கிற குறும்படத்தில் கதையின் நாயகியாக நடித்துள்ளார் மேனகா சுரேஷ். இதில் அவரது ஜோடியாக நடிகரும், இயக்குனருமான பிரதாப் போத்தன் நடித்துள்ளார். இதில் பிரதாப் போத்தன் பார்வை குறைபாடுள்ளவராகவும், மேனகா பார்வையற்றவராகவும் நடித்துள்ளனர்.. இந்த குறும்படத்தின் டீசரை சமீபத்தில் நடிகர் திலீப் வெளியிட்டார்.