Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய்க்கு பிடித்த அப்பா வேடம்

14 ஜூன், 2017 - 10:42 IST
எழுத்தின் அளவு:
Vijay-likes-father-role

தெறியைத் தொடர்ந்து மீண்டும் அட்லி இயக்கத்தில் நடித்து வரும் விஜய்யின் 61வது படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. தற்போது விஜய்-சமந்தா நடிக்கும் காட்சிகள் படமாகி வருகிறது. அவர்களுடன் வடிவேலு, யோகிபாபு ஆகியோரும் நடித்து வருகிறார்கள். இதையடுத்து விஜய், சமந்தா இடம்பெறும் இரண்டு பாடல் காட்சிகளும் படமாக்கப்பட உள்ளது. அதன்பிறகு பூசணிக்காய் உடைத்து விடுவார்கள் என்று தெரிகிறது. இந்த படத்தில் நடித்து முடித்ததும் உடனடியாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் விஜய் நடிப்பார் என்றும் அவரது தரப்பில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.


மேலும், அட்லி இயக்கத்தில் நடித்த தெறி படம் விஜய்க்கு திருப்திகரமாக இருந்ததால் உடனடியாக அடுத்த ஸ்கிரிப்ட்டை ரெடி பண்ணுமாறு அவரைக் கேட்டுக்கொண்டார். அதேபோல், தற்போது மீண்டும் அவர் இயக்கத்தில் நடித்துள்ள 61-வது படத்தில் மூன்று வேடங்களில் நடித்துள்ள விஜய்க்கு, தாடி வைத்து நடித்துள்ள அப்பா விஜய் வேடம் ரொம்பவே பிடித்து விட்டதாம். அதை அட்லி படமாக்கிய விதமும் அவரை வெகுவாக கவர்ந்துள்ளதாம். சமீபத்தில் அந்த காட்சிகளை பார்த்து ரசித்த விஜய், அட்லியை கட்டித்தழுவி பாராட்டியிருக்கிறார். ஆக, மறுபடியும் அட்லியிடம் கதை ரெடி பண்ண சொல்கிறாரா விஜய் என்பது விரைவில் தெரிந்து விடும்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in