விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
ஜெயம்கொண்டான், கண்டேன் காதலை, சேட்டை படங்களை இயக்கிய கண்ணன் தயாரித்து, இயக்கி இருக்கும் படம் இவன் தந்திரன். கவுதம் கார்த்திக், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆர்.ஜே.பாலாஜி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ்.எஸ்.தமன் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. தொடர்ந்து இன்று(ஜூன் 13-ம் தேதி) செய்தியாளர்களிடம் பேசிய கவுதம் கார்த்திக்...
"நான் சினிமாவுக்கு வந்த புதிதில் என்னால் சினிமாவை புரிந்து கொள்ள முடியவில்லை. அப்பா ஷூட்டிங்கிற்கு லேட்டாக வருவார் என்பார்கள், ஆகையால் என்னை வைத்து படம் தயாரிக்க ஆரம்பத்தில் தயாரிப்பாளர்கள் தயங்கினர். ஆனால் எனக்கு அப்படி ஒரு பெயர் வந்து விடக்கூடாது என்று பயந்தேன். ஒரு நாள் கூட நான் படப்பிடிப்புக்கு தாமதமாக சென்றது கிடையாது. சொன்ன நேரத்திற்குள் சென்று விடுவேன். நான் சோர்ந்து போன சமயத்தில் எனக்கு உறுதுணையாக இருந்தது என் அம்மா தான், நிறைய நம்பிக்கை தருவார். நானும் என் தாத்தா, அப்பாவை போன்று காதல் திருமணம் தான் செய்வேன். அப்பாவுடன் நடித்த நடிகைகளில் நக்மா, ரேவதி ஜோடி சிறப்பாக இருக்கும். தற்போது கைவசம் 6 படங்கள் உள்ளன. இதில் இவன் தந்திரன், இந்திரஜித், சிப்பாய் உள்ளிட்ட 4 படங்களை முடித்துவிட்டேன். இரண்டு படங்களில் நடித்து வருகிறேன் என்றார்.