மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சமூக வலைத்தளங்களில் எதற்குத்தான் போட்டி போடுவது என்று தெரியவில்லை. அடுத்த வருடப் பிறந்த நாள் கொண்டாட்டத்தைக் கூட இந்த வருடப் பிறந்த நாள் முடிந்ததும் ஆரம்பித்துவிடுவார்கள் போலிருக்கிறது. ஜுன் 22ம் தேதி விஜய்யின் பிறந்த நாள் வருவதால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகவே விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் அடிக்கடி ஏதாவது ஒரு விஷயத்தை ஆரம்பித்து அதை டிரென்டிங்கில் கொண்டு வரும் வேலையை ஆரம்பித்துவிட்டார்கள்.
கடந்த சில நாட்களாக அது சூர்யா ரசிகர்களுக்கும் ஒரு பொறாமையை ஏற்படுத்தியிருக்கும் போலிருக்கிறது. அவர்களோ, அடுத்த மாதம் 23ம் தேதி வர இருக்கும் சூர்யாவின் பிறந்த நாளை இப்போதே கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். கடந்த சில நாட்களாக விஜய் ரசிகர்களும், சூர்யா ரசிகர்களும் எதையாவது ஒரு விஷயத்தை ஆரம்பித்து அதை டிரென்டிங்கில் கொண்டு வரும் வேலைகளில் இறங்கிவிட்டார்கள்.
ஆனால், ஏதாவது ஒரு மேடை கிடைத்தால் போதும், விஜய்யும், சூர்யாவும் நாட்டுக்கு கருத்து சொல்ல ஆரம்பித்துவிடுகிறார்கள். அந்தக் கருத்தை முதலில் தங்களது ரசிகர்களிடம் சொல்லி உருப்படியாக ஏதாவது ஒரு நல்ல விஷயத்தைச் செய்ய வைக்கலாம். டுவிட்டரில் டிரென்டிங்கில் வந்து என்ன நடக்கப் போகிறது. அதனால் யாருக்கு பலன்?.