டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
'ஆடுகளம்' படத்தில் நாயகியாக அறிமுகமானவர் டாப்ஸீ. அதன் பின் தமிழில் அவர் நடித்த சில படங்கள் சரிவரப் போகவில்லை. தெலுங்கிலும் வாய்ப்புகள் குறைந்ததால் ஹிந்திப் பக்கம் போனார். அங்கு அமிதாப்பச்சனுடன் நடித்த 'பின்க்' திரைப்படம் டாப்ஸீக்கு ஹிந்தித் திரையுலகத்தின் கதவைத் தாராளமாகத் திறந்துவிட்டது. அதன் பின் ஹிந்திப் படங்களில் நடிக்க அதிகம் ஆர்வம் காட்டினார் டாப்ஸீ.
தற்போது ஹிந்தித் திரையுலகின் பிரபல தயாரிப்பாளரான சாஜித் நடியத்வாலா தயாரிப்பில் 'ஜூட்வா 2' படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார். படப்பிடிப்பு சமயத்தில் டாப்ஸீயும், சாஜித்தும் நெருங்கிப் பழகுவதாக பாலிவுட் வட்டாரங்களில் செய்தி பரவியுள்ளது. ஆனால், இது படம் சம்பந்தப்பட்ட பழக்கம்தானே தவிர வேறு எந்தப் பழக்கமும் இல்லை என டாப்ஸீ மறுத்துள்ளார்.
இதனிடையே, படத்தின் முதல் கதாநாயகியான ஜாக்குலின் பெர்ணான்டஸ், டாப்ஸீ மீது கடும் கோபத்தில் இருக்கிறாராம். படத்தின் இரண்டாவது நாயகியான டாப்ஸீ அவருக்கே அதிக முக்கியத்துவம் வரும் விதத்தில் படங்களின் காட்சிகளை மாற்றிவிட்டார் என ஜாக்குலின் குற்றம் சாட்டுகிறாராம். பாலிவுட்டில் தற்போதைக்கு பரபரப்பான சண்டை இதுதான் என்கிறார்கள்.