டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தில் தமிழுக்கு வந்தவர் டாப்சி பன்னு. அதன்பிறகு வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா-2, வை ராஜா வை என பல படங்களில் நடித்த அவரை தற்போது தமிழ்ப்படங்களில் பார்க்க முடியவில்லை. இந்தநிலையில், டாப்சி பன்னுவைத் தொடர்ந்து தற்போது அர்த்தனா பின்னு என்ற பெயரில் கேரளாவில் இருந்து ஒரு நடிகை தமிழுக்கு என்ட்ரி கொடுத் துள்ளார். இவர் தமிழில் ஒப்பந்தமான முதல் படம் ஜி.வி.பிரகாஷின் செம. ஆனால் அதன்பிறகு அர்த்தனா பின்னு கமிட்டான தொண்டன் படம் முதலில் திரைக்கு வந்து விட்டது. அந்த படத்தில் சமுத்திரகனியின் தங்கையாக, விக்ராந்துக்கு ஜோடியாக நடித்த அர்த்தனா பின்னு, வெண்ணிலா கபடிக்குழு-2 படத்திலும் விக்ராந்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
அவரிடத்தில், டாப்சி பன்னுவைப் பார்த்துதான் அர்த்தனா பின்னு என்ற பெயர் வைத்துக் கொண்டீர்களா? என்று கேட்டால், அப்படியெல்லாம் இல்லீங்க. என் சொந்த பெயரே அதுதான். மேலும், மலையாளத்தில் நான் நடித்த முதல் படத்தில் எனது தந்தை விஜயகுமாரின் பெயரை சேர்த்து அர்த்தனா விஜயகுமாராகத்தான் அறிமுகமானேன். அவர் மலையாளத்தில் சீனியர் நடிகர். ஆனால் எனக்கு அப்பாவின் பெயரை பயன்படுத்தி சினிமாவில் முன்னேற விருப்பமில்லை. அதனால்தான் அவரது பெயரை எனது பெயரில் இருந்து நீக்கிவிட்டு அர்த்தனா பின்னு என்ற பெயரிலேயே தமிழில்ப் படங்களில் நடித்து வருகிறேன் என்கிறார் அவர்.