ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஜனதா கேரேஜ் படத்தை அடுத்து ஜூனியர் என்டிஆர் நடித்து வரும் படம் ஜெய் லவகுசா. கே.எஸ்.ரவீந்திரா இயக்கும் இந்த படத்தில் ராக்ஷி கண்ணா, நிவேதா தாமஸ் நாயகிகளாக நடித்துள்ளனர். ஆக்சன் கதையில் உருவாகி வரும் இந்த படம் செப்டம்பர் 1-ந்தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தை முடித்ததும் திரிவிக்ரம் இயக்கும் புதிய படத்தில் நவம்பர் மாதம் முதல் நடிக்கிறார் ஜூனியர் என்டிஆர்., அது அவரது 28-வது படமாகும்.
மேலும், தற்போது பவன் கல்யாணின் 25வது படத்தை இயக்கி வரும் திரிவிக்ரம், அடுத்து ஜூனியர் என்டிஆரை இயக்கும் படத்தை பிரமாண்ட பட்ஜெட்டில் இயக்குகிறாராம். அந்த படத்தில் சில பாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றுகிறார்களாம். அதனால் இதுவரை ஜூனியர் என்டிஆர் நடித்த படங்களில் இது ஸ்பெசல் படமாகும் இருக்கும் என்கிறார்கள்.