திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
தெலுங்கு சினிமாவின் பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்தவர் நாகார்ஜுனா. பழம்பெரும் நடிகர் நாகேஸ்வரராவின் மகன். நாகார்ஜுனா சினிமாவில் நடிக்க ஆரம்பித்த நாட்களில், லட்சுமி ராமநாயுடு என்பவரை 1984ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். லட்சுமி பிரபல தயாரிப்பாளர் ராமநாயுடுவின் மகள், பிரபல நடிகர் வெங்கடேசின் சகோதரி. 1990ம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். இவர்கள் மகன்தான் நாக சைதன்யா. அதன் பிறகு 1992ம் ஆண்டு தன்னுடன் நடித்த அமலாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அமலா, டி.ராஜேந்தரின் மைதிலி என்னை காதலி படத்தில் அறிமுகமாகி தென்னிந்திய மொழிகளில் 200 படங்கள் வரை நடித்தவர்.
இவர்களுக்கு திருமணம் நடந்து நேற்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைந்தது. தம்பதிகள் இருவரும் இதனை ஓட்டலில் நண்பர்களுக்கு பார்ட்டி வைத்து கொண்டாடினார்கள். 25 வருட இவர்களது வாழ்க்கையில் எந்த சூழ்நிலையிலும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதில்லை. திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்ட அமலா, அதன் பிறகு விலங்குகள் பாதுகாப்பில் கவனம் செலுத்தினார். நாகா, அவருக்கு முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறார். 25-வது திருமண நாளையொட்டி தம்பதிகளுக்கு தெலுங்கு திரையுலகினர் வாழ்த்து தெரிவித்தனர். தம்பதிகள் இருவரும் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை நாகார்ஜுனா தனது முகப்புத்தத்தில் வெளியிட்டுள்ளார்.