‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
ஜெயம்கொண்டான், கண்டேன் காதலை, சேட்டை படங்களை இயக்கிய கண்ணன் தயாரித்து, இயக்கி இருக்கும் படம் இவன் தந்திரன். இதில் கவுதம் கார்த்திக், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆர்.ஜே.பாலாஜி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ்.எஸ்.தமன் இசை அமைத்திருக்கிறார். படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் கவுதம் கார்த்திக் உருக்கமாக பேசியதாவது:
நான் சினிமாவுக்கு வந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. என்னை இதுவரை தாங்கி பிடித்திருப்பது மீடியாக்கள் தான். மீடியாவோட உதவியால் தான் இப்போது ரங்கூன் நல்லா போய்கிட்டிருக்கு. நான் சினிமாவுக்கு வந்த புதிதில் என்னால் சினிமாவை புரிந்து கொள்ள முடியவில்லை. யாரை நம்புறது, யாரை நம்பக்கூடாதுன்னு தெரியாது. யார்கிட்ட என்ன பேசுறது? எப்படி பேசுறதுன்னுகூட தெரியாது. எனக்கு அறிவுரை சொல்லவோ வழிநடத்தவோ யாரும் கிடையாது. இதை நான் சொல்லும்போது கண் கலங்குகிறது.
இப்போது நல்ல நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். சினிமா புரிந்திருக்கிறது. வெற்றியும் கைகூடி வந்து கொண்டிருக்கிறது. அப்பா ஷூட்டிங்கிற்கு லேட்டாக வருவார் என்பார்கள், அப்படி ஒரு பெயர் எனக்கும் வந்து விடக்கூடாது என்பதற்காக ஒரு நாள் கூட நான் படப்பிடிப்புக்கு லேட்டாக செல்வதில்லை. இவ்வாறு கவுதம் கார்த்திக் பேசினார்.
விழாவில் கலைப்புலி எஸ்.தாணு, டி.சிவா, கே.பாக்யராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இவன் தந்திரன் படத்தை தனஞ்செயன் வாங்கி வெளியிடுகிறார்.