டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சுஷாந்த் சிங் மற்றும் கிர்த்தி சனோன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ராப்தா. சரித்திரம் மற்றும் இந்தக்காலம் இரண்டையும் கலந்து ராஜமெளலியின் மகதீரா பாணியில் இப்படம் உருவாகி உள்ளது. ஆனால் இப்படத்திற்கு விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் போதிய வரவேற்பு இல்லை. இதனால் படத்தின் வசூலும் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.55 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள ராப்தா படம் கடந்த வெள்ளியன்று சுமார் 1800 தியேட்டர்களில் ரிலீஸானது. வெளியான மூன்று நாட்களில் படம் வெறும் ரூ.15.93 கோடி தான் வசூலித்திருக்கிறது. இனிவரும் நாட்களில் எதிர்பார்த்த வசூல் கிடைக்குமா என்பது சந்தேகம். ஆகையால் ராப்தா படம் தோல்வியை தழும் என விநியோகிஸ்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது.