‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பிரபல ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இயக்குநராக களமிறங்கியுள்ள படம் 96. முதன்முறையாக விஜய்சேதுபதி, த்ரிஷா இணைந்து நடிக்கின்றனர். 90 காலக்கட்டத்தில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. முற்றிலும் வித்தியாசமாக இதுவரை விஜய்சேதுபதி - த்ரிஷா இருவரும் நடித்திராத ஒருரோலில் இந்த 96 உருவாகி வருகிறது. இப்படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு முறைப்படி இன்று ஆரம்பமானது. விஜய்சேதுபதி - த்ரிஷா, இயக்குநர் பிரேம் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். அந்தமானில் விஜய்சேதுபதி, திரிஷா சம்மந்தப்பட்ட முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. அத்துடன் கோல்கட்டா, ராஜஸ்தான், பாண்டிச்சேரி, கும்பகோணம், சென்னை போன்ற இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.