அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
பாகுபலி, பாகுபலி-2 படங்களின் மெகா ஹிட்டுக்குப்பிறகு பிரபாஸ் நடிக்கும் படம் சாஹோ. இந்த படத்தை சுஜீத் இயக்குகிறார். யு.வி.வி. கிரியேசன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் வில்லனாக கத்தியில் விஜய்யுடன் மோதிய பாலிவுட் நடிகர் நீல் நிதின் முகேஷ் நடிக்கிறார். பாகுபலி-2 படத்தில் நடித்து முடித்த பிறகு வெளிநாடு சென்று ஓய்வெடுத்து வரும் பிரபாஸ், அடுத்த மாதம் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.
மேலும், பாகுபலி-2விற்கு பிறகு பிரபாஸ்க்கு இந்தியா முழுக்க ரசிகர்கள் உருவாகியிருப்பதால் இந்த படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் தயாரிக்கிறார்கள். அதோடு, பிரபல இந்தி நடிகைகளை இப்படத்தில் பிரபாசுக்கு ஜோடி சேர்க்கலாம் என்று தீபிகா படுகோனே, ஷ்ரத்தா கபூர் ஆகியோரை அணுகினர். ஆனால் அவர்கள் கால்சீட் இல்லை என மறுத்து விட்டனர். இந்த நிலையில், தற்போது அனுஷ்காவையே மீண்டும் பிரபாசுக்கு ஜோடியாக நடிக்க வைக்க இருப்பதாக பாலிவுட் மீடியாக்களில் செய்தி வெளியாகியிருக்கிறது.
ஆனால், இதற்கு முன்பு தமன்னா உள்ளிட்ட சில நடிகைகள் சாஹோ படத்தில் நடிப்பதாக செய்தி வெளியானபோது அதற்கு மறுப்பு தெரிவித்த யு.வி.வி. கிரியேசன்ஸ் நிறுவனம், இந்த முறை அந்த செய்திக்கு மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை. ஒருவேளை இந்த செய்தி உறுதியாக இருந்தால், பில்லா, மிர்ச்சி, பாகுபலி, பாகுபலி-2 படங்களுக்கு பிறகு பிரபாஸ்-அனுஷ்கா இணையும் ஐந்தாவது படமாக சாஹோ இடம் பெறும்.