தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிச்சைக்காரன் படத்திற்கு பிறகு சைத்தான் படத்தில் நடித்த விஜய் ஆண்டனி, தற்போது அண்ணாதுரை படத்தில் நடித்து வருகிறார். சுசீந்திரன் உதவியாளர் ஸ்ரீனிவாசன் இந்த படத்தை இயக்குகிறார். பிச்சைக்காரனுக்கு பிறகு தெலுங்கிலும் விஜய் ஆண்டனிக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இந்த படம் தயாராகி வருகிறது. அரசியல் திரில்லர் கதையில் தயாராகி வரும் இந்த படத்தில் அண்ணன்-தம்பி என இரண்டு வேடங்களில் நடிக்கிறார் விஜய் ஆண்டனி. இந்த படத்தை ராதிகாவின் ராடான் மீடியா தயாரித்து வருகிறது.
இதையடுத்து மிர்ச்சி சிவா - பிரியா ஆனந்த் நடித்த வணக்கம் சென்னை படத்தை இயக்கிய கிருத்திகா உதயநிதி இயக்கும் காளி படத்தில் நடிக்கிறார் விஜய் ஆண்டனி. இந்த படத்தில் இதுவரை நடித்திராத ஒரு சவாலான வேடத்தில் நடிக்கிறார் விஜய் ஆண்டனி. இந்த படத்தை அவரது விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேசன் நிறுவனமே தயாரிக்கிறது. மேலும், அண்ணாதுரை-காளி ஆகிய இரண்டு படங்களிலும் நடிக்கும் நாயகிகள் யார் யார் என்பது சஸ்பென்சாக இருந்து வரும் நிலையில், அந்த விவரத்தை விரைவில் அறிவிக்க உள்ளனர்.