கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
வீரசேகரன் படத்தில் அறிமுகமான அமலாபால், சிந்து சமவெளி படத்தில் நடித்தபோது ஆபாச நடிகை என்ற விமர்சனங்களுக்கு ஆளானார். என்றாலும், அதையடுத்து பிரபுசாலமனின் மைனா படத்தில் நடித்து தன் மீது விழுந்த ஆபாச நடிகை என்கிற இமேஜில் இருந்து விடுபட்டார். பின்னர், நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்தவர், ஏ.எல்.விஜய் இயக்கிய தெய்வத்திருமகள் படத்தில் நடித்தபோது அவரை காதலித்தார். அதையடுத்து விஜய்யை வைத்து ஏ.எல்.விஜய் இயக்கிய தலைவா படத்திலும் நடித்த அமலாபால், பின்னர் டைரக்டர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்து கொண்டார். என்றாலும் ஓராண்டிலேயே அவர்களுக்கிடையே பிரிவு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டனர்.
இந்நிலையில், தற்போது மீண்டும் பிசியான நடிகையாகி விட்டார் அமலாபால். தனுசுடன் வேலையில்லா பட்டதாரி-2 படத்தில் நடித்திருப்பவர், திருட்டுப் பயலே-2, பாஸ்கர் ஒரு ராஸ்கல் என பல படங்களில் தற்போது நடித்துக் கொண்டிக்கிறார். அதோடு, இப்போது முன்பை விட கிளாமராகவும் நடித்து வரும் அமலாபால், தனது டுவிட்டரில் தற்போது ஒரு ஹாட் போட்டோ வெளியிட்டிருக்கிறார். அத்துடன், எனக்குள் இருக்கும் நெருப்புதான் என்னை இங்கு பிழைக்க வைக்கிறது என்றும் பதிவிட்டுள்ளார். அமலாபால் வெளியிட்டுள்ள இந்த கிளாமர் போட்டோ இணையதளங்களில் வைரலாகியிருக்கிறது.