ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தனது அடுத்து இயக்க இருக்கும் நடனம் பற்றிய படத்தில் நடிகர் சல்மான் கான் நடிக்க உள்ளதாக டைரக்டர் ரெமோ டிசவ்சா ஏற்கனவே அறிவித்து விட்டார். இந்நிலையில் இப்படத்தில் நடிக்க தான் சல்மானை தேர்வு செய்தது ஏன் என ரெமோவே செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், படத்தின் கதைப்படி நடனத்தில் அதிகம் சாராத ஒருவர் நடிக்க தேவைப்பட்டார். அதனால் தான் இதில் நடிப்பதற்கு சல்மான் கான் பொறுத்தமாக இருப்பார் என முடிவு செய்தேன். இப்படத்தில் நடிப்பதற்காக சல்மான் கான் கடினமான நடன அசைவுகளுக்கு பயிற்சி எடுத்து வருகிறார். தங்கல் படத்தின் மூலம் விளையாட்டிற்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதோ, அதே போன்று இப்படத்திற்கு பிறகு நடனம் தொடர்பான படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என தெரிவித்தார்.