பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
பி.ஆர்.மூவி மேக்கர்ஸ் சார்பில் பி.ஆர்.காளியப்பன் தயாரிக்கும் படம் வளையல், ஷக்தி சிவன், பவ்யாஸ்ரீ, மனோஜ் கே.பாரதி, சத்யஜித், சார்ப்லின் பாலு, ராம்ராஜ் உள்பட பலர் நடிக்கிறார்கள். டி.எஸ்.முரளி சுப்பிரமணி இசை அமைக்கிறார். ஜி.சிவா ஒளிப்பதிவு செய்கிறார். இது மார்வாடி பெண்ணின் காதல் கதை என்கிறார் இயக்குனர் குருசேகரா. படம் பற்றி அவர் மேலும் கூறியதாவது:
கிராமத்தில் ஒரு சிறிய தவறை செய்து விட்டு நகரத்துக்கு ஓடிவருகிறார் ஹீரோ. வந்த இடத்தில் நண்பனும் ஏமாற்றிவிட திக்கு தெரியாமல் தவிக்கும் அவனுக்கு ஒரு மார்வாடி பெண்ணின் காதல் கிடைக்கிறது. அழுக்கான தனக்கு அழகான பெண் காதலியானது அவனுக்கு மகிழ்ச்சி. அந்த காதலுக்காக அவன் எதையும் செய்யத் தயாராகிறான். இந்த காதலில் வளையலுக்கு பெரிய முக்கியத்தும் இருக்கிறது. இந்த கவித்துமான காதலுக்கு பின்னால் அந்த பெண்ணை பற்றி ஒரு அதிர்ச்சியான விஷயமும் இருக்கிறது. அதன் பிறகும் காதல் நிலைத்ததா என்பதுதான் கதை. என்கிறார் குருசேகரா.