ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், சினிமா மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம் (கில்டு) ஆகியவை இணைந்து கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
பாடல்கள், படத் துணுக்குகள், திரைப்படங்களின் பூஜைகள், டிரைய்லர்கள், படக்காட்சிகள் மற்றும் சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் அனைத்தும் எந்த ஒரு தொலைக்காட்சி நிறுவனங்களுக்கோ, தனியார் கேபிள் உரிமையாளருக்கோ, தனி நபருக்கோ, தனிப்பட்ட அமைப்பிற்கோ கொடுக்கப்படவில்லை என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம்.
உள்ளூர் மற்றும் வெளியூர் தொலைக்காட்சி நிறுவனங்கள் இவற்றை ஒளிபரப்பு செய்தாலோ ஒளிபரப்பு செய்ய உதவியாக இருந்தாலோ அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து அதற்கான தண்டனை கிடைக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும், கில்டும் இணைந்து உறுதியாக துணை நிற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.