ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ்த் திரையுலகில் பல வருடங்களாக வழங்கப்பட்டு வரும் திரைப்பட விருதுகளில் முக்கியமானது ஃபிலிம் பேர் விருதுகள். இந்திய அளவில் தேசிய திரைப்பட விருதுகள் மட்டுமே பெருமைக்குரிய ஒன்றாக கருதப்படுகிறது. அதற்கடுத்து பெருமைக்குரிய விருதாக ஃபிலிம்பேர் விருது திரைப்படத் துறையினரால் கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தென்னிந்தியத் திரைப்படங்களுக்கான விருதுகளை ஃபிலிம்பேர் தனி விழாவாக நடத்திக் கொண்டிருக்கிறது. அதன்படி கடந்த 2016ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா விரைவில் ஐதராபாத்தில் நடைபெற உள்ளது.
64வது ஃபிலிம் பேர் விருதுக்காக தமிழ்த் திரைப்படங்களிலிருந்து போட்டியிட உள்ளவர்கள் விவரம் வருமாறு...
சிறந்த படம் :
அச்சம் என்பது மடமையடா
இறுதிச் சுற்று
கபாலி
ஜோக்கர்
தெறி
விசாரணை
சிறந்த இயக்குனர்
கௌதம் மேனன் (அச்சம் என்பது மடமையடா)
சுதா கோங்கரா (இறுதிச் சுற்று)
பா. ரஞ்சித் (கபாலி)
ராஜு முருகன் (ஜோக்கர்)
அட்லீ (தெறி)
வெற்றி மாறன் (விசாரணை)
சிறந்த நடிகர்
தனுஷ் (கொடி)
மாதவன் (இறுதிச் சுற்று)
ரஜினிகாந்த் (கபாலி)
சூர்யா (24)
விஜய் (தெறி)
விக்ரம் (இருமுகன்)
சிறந்த நடிகை
நயன்தாரா (இருமுகன்)
ரித்திகா சிங் (இறுதிச் சுற்று)
சமந்தா (24, தெறி)
த்ரிஷா (கொடி)
தமன்னா (தேவி)
சிறந்த துணை நடிகர்
மகேந்திரன் (தெறி)
ராஜேந்திரன் (தெறி)
சமுத்திரக்கனி (விசாரணை)
சதீஷ் கிருஷ்ணன் (அச்சம் என்பது மடமையடா)
சதீஷ் (ரெமோ)
சிறந்த துணை நடிகை
ஐஸ்வர்யா ராஜேஷ் (தர்மதுரை)
அனுபமா பரமேஸ்வரன் (கொடி)
தன்ஷிகா (கபாலி)
நித்யா மேனன் (24)
ராதிகா சரத்குமார் (தெறி)
சரண்யா பொன்வண்ணன் (கொடி)
சிறந்த இசையமைப்பாளர்
அனிருத் ரவிச்சந்தர் (ரெமோ)
ஏ.ஆர்.ரகுமான் (அச்சம் என்பது மடமையடா, 24)
ஜி.வி.பிரகாஷ்குமார் (தெறி)
சந்தோஷ் நாராயணன் (கபாலி)
சிறந்த பாடலாசிரியர்
அருண்ராஜா காமராஜ் - நெருப்புடா...(கபாலி)
மதன்கார்க்கி - நான் உன்... (24)
தாமரை - தள்ளிப் போகாதே... (அச்சம் என்பது மடமையடா)
வைரமுத்து - எந்தப் பக்கம்... (தர்மதுரை)
விவேக் - என் சுழலி... (கொடி)
சிறந்த பின்னணிப் பாடகர்
அனிருத் - செஞ்சிட்டாளே...(ரெமோ)
அருண்ராஜா காமராஜ் - நெருப்புடா....(கபாலி)
ஜிதின் ராஜ் - ஏதோ மாயம் செய்கிறாய்...(வாகா)
சித் ஸ்ரீராம் - மெய் நிகரா... (24)
சுந்தர் ஐயர் - ஜாஸ்மின் யு... (ஜோக்கர்)
சிறந்த பின்னணிப் பாடகி
சின்மயி - நான் உன்... (24)
கே.எஸ். சித்ரா - கொஞ்சிப் பேசிட வேண்டாம்... (தர்மதுரை)
மகாலட்சுமி ஐயர் - உன் மேல ஒரு கண்ணு... (ரஜினி முருகன்)
நீத்தி மோகன் - செல்லக் குட்டி... (தெறி)
ஸ்வேதா மோகன் - மாய நதி... (கபாலி)