'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கடந்த ஆண்டில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலுமே பல வெற்றிப் படங்களில் நடித்து வந்தார் ஸ்ருதிஹாசன். ஆனால் இந்த 2017-ம் ஆண்டில் அவர் நடித்து தெலுங்கில் வெளியான காட்டமாரிடு, தமிழில் சிங்கம்-3 ஆகிய படங்கள் பெரிய ஹிட் ஆகவில்லை. அதோடு, முதன்முதலாக தனது தந்தை கமலுடன் இணைந்து ஸ்ருதிஹாசன் நடித்து வந்த சபாஷ் நாயுடு படமும் கிடப்பில் கிடக்கிறது. அதோடு, சுந்தர்.சியின் சங்கமித்ராவில் டைட்டில் ரோலில் நடிக்கயிருந்தார். மூன்று மொழி படம் என்பதால் இந்த படம் ஸ்ருதியை இன்னொரு அனுஷ்கா போன்று பெரிய இடத்துக்கு கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது அந்த படத்தில் இருந்தும் வெளியேறி விட்டார் ஸ்ருதிஹாசன்.
இந்த நிலையில், ஸ்ருதிஹாசன் நடித்த பெஹென் ஹோகி டெரி என்ற இந்தி படம் கடந்த 9-ந்தேதி திரைக்கு வந்துள்ளது. இந்த படத்தில் ராஜ்குமார் ராவ் நாயகனாக நடித்துள்ளார். இந்த படம் வெளியான முதல் நாள் 40 லட்சம் வசூலித்துள்ள நிலையில், பாக்ஸ் ஆபீசில் தோல்வியை சந்தித்துள்ளது. அந்தவகையில் இந்த ஆண்டில் மூன்றாவது அதிர்ச்சி தோல்வியை சந்தித்திருக்கிறார் ஸ்ருதிஹாசன்.