'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ரன்பீர் கபூர் - கத்ரீனா கைப் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜகா ஜசூஸ். அனுராக் பாசு இயக்கியுள்ளார், சித்தார்த் ராய் கபூர், ரன்பீர் கபூர் மற்றும் அனுராக் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ரன்பீர், கத்ரீனாவை புகழ்ந்து பேசினார்.
அவர் பேசுகையில், "சினிமா துறையை பொறுத்தமட்டில் கத்ரீனா ஒரு சூப்பர் ஹிட் எந்திரம் என்று நான் நினைக்கிறேன். எதிர்காலத்தில் நான் படங்கள் தயாரித்தால், நிச்சயம் கத்ரீனாவுக்காகவே படம் தயாரிப்பேன்" என்றார். இதை அருகில் இருந்து கேட்ட கத்ரீனா, பதிலுக்கு நன்றி என்று சிரித்த முகத்தோடு கூறினார்.
ரன்பீரும், கத்ரீனாவும் நீண்டகாலமாக காதலித்து வந்தனர், சில மாதங்களுக்கு முன்னர் இந்த காதல் முறிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.