'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அமீர்கான் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் "தங்கல்". சமீபத்தில் சீனாவில் வெளியிடப்பட்டது. இந்தியாவை விட சீன மக்களால் அதிகம் விரும்பி பார்க்கப்பட்ட தங்கல் படம் அங்கு மட்டும் சுமார் ரூ.1000 கோடி வசூலை எட்ட உள்ளது. இதன்மூலம் சமீபத்தில் வெளியான பாகுபலி படத்தின் வசூலை விட அதிகம் வசூலித்து இந்தியாவில் அதிகம் வசூல் செய்த படம் என்ற சாதனையை தங்கல் எட்டியிருக்கிறது. இந்நிலையில் தங்கல் படத்திற்கு சீனாவில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மேலும் பல நாடுகளில் ரிலீஸ் செய்யும் வேலைகள் நடந்து வருகிறது. அதன்படி முதற்கட்டமாக வருகிற ஆகஸ்ட் 31-ம் தேதி, தங்கல் படம் ஹாங்காங்கில் ரிலீஸாக உள்ளது. ஆங்கிலம் மற்றும் சீனா மொழிகளின் சப்-டைட்டிலுடன் படம் ரிலீஸாக உள்ளது.