டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இம்தியாஸ் அலி இயக்கத்தில், ஷாரூக்கான், அனுஷ்கா சர்மா நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் "ஜப் ஹேரி மெட் செஜல்". தற்போது இதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. படத்திற்கு தலைப்பு வைக்காமலே ஷூட்டிங் நடந்து வந்த நிலையில், நேற்று முன் தினம் தான் தலைப்பை அறிவித்தார்கள். இந்நிலையில் இப்படம் ஆகஸ்ட் 11-ம் தேதி ரிலீஸாவதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது அதில் ஒரு சின்ன மாற்றம் செய்திருக்கிறார்கள். அதன்படி, "ஜப் ஹேரி மெட் செஜல்" படம் ஒருவாரம் முன்னதாக ஆகஸ்ட் 4-ம் தேதி ரிலீஸாக உள்ளது.