ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள படம் டியூப்லைட். கபீர்கான் இயக்கியுள்ளார். சல்மான் உடன் சீன நடிகை ஒருவர் நடித்திருக்கிறார். கூடவே சல்மானின் சகோதரர் சோகைல் கான் முக்கியமான ரோலில் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. தற்போது டியூப்லைட் படத்தின் புரொமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறது படக்குழு. இந்நிலையில் சோகைல் வேடத்தில் அக்ஷ்ய் குமார் தான் முதலில் நடிப்பதாக இருந்ததாம்.
இதுப்பற்றி இயக்குநர் கபீர்கான் கூறியிருப்பதாவது... "டியூப்லைட் படத்தில் சல்மான் உடன் அக்ஷ்ய் குமாரை தான் நடிக்க வைக்க எண்ணினேன். ஆனால் சோகைல் கான் என் எண்ணத்தை மாற்றிவிட்டார். ஆகையால் சல்மான்-சோகைல் இடையே நல்ல கெமிஸ்ட்ரி உருவாக வேண்டும் என்பதற்காக அதிகமாக உழைத்தேன்" என்றார்.
டியூப்லைட் படம் வருகிற ஜூன் 23-ம் தேதி ரிலீஸாக உள்ளது.