ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் அடுத்ததாக தமிழில் இயக்கவுள்ள படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் உதயநிதி. இந்தப்படம் மலையாளத்தில் கடந்த வருடம் பஹத் பாசில் நடிப்பில் சூப்பர்ஹிட்டான 'மகேஷிண்டே பிரதிகாரம்' படத்தின் ரீமேக் தான். மலையாளத்தில் இந்தப்படத்தை பார்த்த பலரும் உதயநிதிக்கு இது பொருத்தமான கதை என்றும் இதன் சாராம்சம் கெடாமல் சிறந்த முறையில் படமாக்கினால் உதயநிதிக்கு ஒரு ஹிட் படமாக அமையும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்கள். அதற்காகவே இந்தப்படத்தை தமிழுக்கு ஏற்றார்போல சில மாற்றங்களுடன் உருவாக்க இருப்பதாக கூறியுள்ளார் இயக்குனர் பிரியதர்ஷன்.
இதன் ஒரிஜினலில் பஹத் பாசில் தவிர அலான்சியர் லே என்கிற அறுபது வயதான நடிகர் ஒருவர் அறிமுகமாகி இருந்தார். இந்தப்படத்திற்கு பிறகு தற்போது அவர் மோகன்லால், மம்முட்டி படங்களில் தொடர்ந்து நடிக்கும் அளவுக்கு பிசியான நடிகராக மாறிவிட்டார். அப்படிப்பட்ட கேரக்டரில் தான் தமிழில் எம்.எஸ்.பாஸ்கர் நடிக்கவுள்ளார். உதயநிதியின் மாமவாக நடிக்கும் எம்.எஸ்.பாஸ்கர் போகிற போக்கில் வழிப்போக்கர்கள் இருவரிடம் வம்பிழுக்கும் சாதாரண நிகழ்வு ஒன்று, சுமுகமாக சென்றுகொண்டிருக்கும் உதயநிதியின் வாழ்க்கையையே எப்படி புரட்டிப்போடுகின்றது என்பது தான் கதையின் திருப்புமுனையாக அமைய இருக்கிறதாம்.. அந்தப்படத்தில் வில்லனாக ஒரு புதுமுகம் நடித்தது போல இங்கேயும் ஒரு புதிய வில்லனை அறிமுகப்படுத்துவார்கள் என்றே தெரிகிறது.