'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அசாம் மாநிலம் நார்த் கவுகாத்தியில் பிறந்தவர் சுனிதா. நடனம் மீதுள்ள ஈர்ப்பால் நடனம் கற்றவர் மும்பையில் நடந்த டான்ஸ் இண்டியா டான்ஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தார். அதன் வழியாக விஜய் டி.வியில் ஜோடி நம்பர் ஒண் நிகழ்ச்சியில் ஆடினார். அதன் பிறகு சீசன் 7 வரைக்கும் ஆடினார்.
இவரது ஆட்டத்தை பார்த்து பிரமித்த நடிகர் தனுஷ் அவருக்கு 3 படத்தில் நடிக்க வாய்ப்பளித்தார். ஆனால் அதன் பிறகு பெரிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. தி நகர், காசேதான் கடவுளடா, அகம் புறம், படங்களை இயக்கிய திருமலையின் மான்வேட்டை படத்தில் நடித்தார். ஆனால் அந்தப் படம் தயாராகி 3 ஆண்டுகள் ஆகியும் வெளிவரவில்லை.
இதனால் சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்து சுனிதா. இப்போது வாய்ப்பு வேட்டையில் தீவிரமாக இறங்கியிருக்கிறார். "நம்பிக்கையோடு அசாமிலிருந்து வந்தேன். நடனத்தில் ஜெயித்தேன் எப்படியாவது சினிமாவிலும் ஜெயிக்க வேண்டும் அதனால் வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கிறேன். சினிமாவில் நல்லவர் யார் கெட்டவர் யார் என்பதை கண்டுபிடிப்பது கஷ்டமாக இருக்கிறது" என்கிறார் சுனிதா.