கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் |
சிவகார்த்திகேயன் நடித்து வரும் வேலைக்காரன் படத்தின் பர்ஸ்ட்லுக் சில தினங்களுக்கு முன் வெளியானது. ஆங்கிலப்படத்தின் போஸ்டரை காப்பியடித்து வடிவமைக்கப்பட்டதால் வேலைக்காரன் பர்ஸ்ட்லுக் போஸ்டரை சமூகவலைத்தளங்களில் கிண்டல் செய்தனர்.
இது தொடர்பாக, இயக்குநர் மோகன்ராஜாவுக்கும், தயாரிப்பாளர் தரப்புக்கும் மன வருத்தம் ஏற்பட்டுள்ளதாக வேலைக்காரன் யூனிட்டில் பேசப்பட்டு வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, வேலைக்காரன் படத்தின் டப்பிங் பணிகள் இன்னும் முடிவடையாத நிலையில், சிவகார்த்திகேயனின் அடுத்தப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 16-ஆம் தேதி துவங்குகிறது
'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்' ஆகிய வெற்றிப் படங்களை தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் மீண்டும் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் இது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்துக்கு, 'வருத்தப்படாத வலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்' படங்களுக்கு இசை அமைத்த டி.இமானே இசையமைக்கிறார். இந்த படத்திற்காக 3 பாடல்களை உருவாக்கி விட்டாராம் டி.இமான்!
'ரெமோ', 'வேலைக்காரன்' ஆகிய படங்களைப் போலவே இந்த படத்தையும் தன்னுடைய நண்பர் 24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்டி.ராஜா தயாரிக்கிறார்.