ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சரவணன் இயக்க பயமேன் படத்தை அடுத்து இப்படை வெல்லும், பொதுவாக எம்மனசு தங்கம் ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார் உதயநிதி. பொதுவாக என் மனசு தங்கம் படத்தை, இயக்குனர்கள் விக்ரமன், பொன்ராம் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றிய தளபதி பிரபு இயக்கியுள்ளார்.
உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக, நிவேதா பெதுராஜ் நடிக்கும் இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் முதன் முதலாக உதயநிதி ஸ்டாலினுடன் பார்த்திபனும் இணைந்து நடிக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. அதில் முறுக்கு மீசை என பக்கா கிராமத்து ரோலில் இருக்கிறார் உதயநிதி. கூடவே இன்னொரு போட்டோவில் உதயநிதி ஸ்டாலின், காலில் செருப்பு அணியாமல் அதிக எடை கொண்ட திரௌபதி அம்மன் சிலையை தலையில் சுமந்து கொண்டு வருவது போல் இருக்கிறார். பாகுபலி படத்தில் பிரபாஸ், சிவலிங்கத்தை சுமந்துகொண்டு நடித்த காட்சியைப்போல், இந்த படத்தில் உதயநிதி இப்படியொரு காட்சியில் நடித்திருக்கிறார்.