பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இயக்குனரும், நடிகருமான, தம்பி ராமையா மகன் உமாபதி ராமையா நடிக்கும் படம், அதாகப்பட்டது மகா ஜனங்களே! பி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர், நடிப்பு ஆசையால், சினிமா பக்கம் வந்திருக்கிறார். புதுமுக இயக்குனர், இன்ப சேகர் இயக்கும் படத்தில், கிடார் வாசிக்கும் கலைஞனாக பயிற்சி எடுத்து நடித்துள்ளார். இந்த கதை, எல்லாரது வாழ்விலும் நடந்தது போல அமைக்கப்பட்டுள்ளது. அப்பா ஒரு, 'கெஸ்ட் ரோலில்' கூட நடிக்கவில்லை. நடிக்க வரும் முன், 'அப்பா ஏதும் அட்வைஸ் செய்தாரா?' என கேட்டால், 'உனக்கு என்ன வருதோ அதை செய்; எதையும் அதிகப்படியா செய்யாமல், இயல்பாக நடி' என்றார். மற்றபடி எனக்கு எந்த அறிவுரையும் சொல்லவில்லை' என சொல்லும் உமாபதிக்கு, முதல் படம் வெளிவரும் முன்பே தேவதாஸ் - 2017 என்ற படத்தில் நடித்து, அது முடிவுறும் நிலையில் இருக்கிறது.