Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'சங்கமித்ரா'வாக மாறுவாரா நயன்தாரா..?

08 ஜூன், 2017 - 17:03 IST
எழுத்தின் அளவு:
Did-Nayanthara-says-ok-to-Sangamithra

சுந்தர்.சி இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாக இருக்கும் வரலாற்று படமான 'சங்கமித்ரா' படத்தில் இருந்து ஸ்ருதிஹாசன் விலகியதற்கு அவர் என்னவேண்டுமானாலும் காரணங்களையும் சாக்கு போக்குகளையும் சொல்லட்டும்.. ஆனால் மிகப்பெரிய வாய்ப்பை அவர் உதாசீனப்படுத்தி விட்டார் என்றே சோஷியல் மீடியாக்கள் அவரை விமர்சிக்கின்றன.. அடுத்தததாக ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக யார் நடிக்க உள்ளார் என இன்னும் படக்குழுவினர் அறிவிக்காத நிலையில் ஹன்ஷிகா நடிப்பார், தமன்னா நடிப்பார் என ஒருபக்கம் யூகங்கள் கிளம்ப ஆரம்பித்தன.


இன்னொரு பக்கமோ சங்கமித்ரா கேரக்டரில் நடிக்க பொருத்தமான நடிகை யாரென சோஷியல் மீடியாவிலேயே வாக்கெடுப்பும் கூட நடத்த ஆரம்பித்துவிட்டார்கள்.. இந்த வாக்கெடுப்பில் அதிக வாக்குகள் பெற்றது நயன்தாரா தானாம். தற்போது ஹீரோயின் கதைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து நடித்துவரும் நயன்தாரா தான் சங்கமித்ராவாக நடிக்க சரியாக இருப்பார் என்றே பலரும் குறிப்பிட்டுள்ளார்கள். அதுமட்டுமல்ல, சுந்தர்.சி இயக்கத்தில் அவர் இதுவரை நடிக்காவிட்டாலும் கூட, படத்தின் ஹீரோக்களாக நடிக்க இருக்கும் ஆர்யா, ஜெயம் ரவி இருவரும் நயன்தாராவின் நெருங்கிய நண்பர்கள் என்பதாலும் கூட இந்தப்படத்தில் நடிக்க சம்மதிக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது. யாருக்கு அதிர்ஷ்டம் இருக்கிறதோ பார்க்கலாம்..


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in