ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தெலுங்கு திரையுலகில் நடிகர் சிரஞ்சீவி தனது 150வது படத்தை முடித்துவிட்டு 151வது படத்தில் கவனத்தை செலுத்திவருகிறார்.. பல வருடங்களாக அவருக்கு சக போட்டியாளராக இருந்துவரும் நடிகர் பாலகிருஷ்ணாவும் தனது பங்கிற்கு இப்போது 101வது படத்தில் நடித்து வருகிறார். பூரி ஜெகநாத் இயக்கிவரும் இந்தப்படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை.. இந்தநிலையில் நாளை (ஜூன்-9) பாலகிருஷ்ணாவின் பிறந்தநாள் வருகிறது..
அன்றைய தினம் பாலகிருஷ்ணா உள்ளூரில் இருக்கமாட்டார்.. ஆம். தற்போது போர்ச்சுக்கல் நாட்டில் நடைபெற்றுவரும் இந்தப்படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார் பாலகிருஷ்ணா. அதனால் தனது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுடன் பேஸ்புக்கில் லைவ்வாக உரையாட தயாராகி வருகிறார்.. ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பதுடன் படத்தின் டைட்டிலையும் அவர் அப்போது அறிவிக்க உள்ளதாகவும் தெரிகிறது.. ஆக, தனது ரசிகர்களுக்கு பிறந்தநாளில் டபுள் ட்ரீட் தரப்போகிறார் பாலகிருஷ்ணா என்றே சொல்லவேண்டும்.