பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
“எனக்கு இளம் வயதிலேயே தலை நரைத்துவிட்டது.. டை அடித்துக்கொண்டு தான் படங்களில் நடித்தேன்” என்கிற உண்மையை, முடியெல்லாம் கொட்டிய நிலையில் பல வருடங்களுக்கு பிறகுதான் உடைத்தார் ரஜினி. ஆனால் நரையும் அழகுதான் என அதையையே ஸ்டைலாக்கி, ட்ரெண்ட் ஆக்கி சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் தொடர்ந்து நடித்து வருகிறார் அஜித். மங்காத்தாவில் ஆரம்பித்து இப்போது உருவாகிவரும் விவேகம் படம் வரை இந்த சால்ட் அண்ட் பெப்பர் லுக்கை தொடர்கிறார் அஜித். ஆனால் அஜித்தே தன்னுடைய லுக்கை விட உங்களுடையது பெட்டர் என ஒரு நடிகருக்கு பாராட்டு பத்திரம் வாசித்துள்ளார். அது வேறுயாருமல்ல நடிகர் ஜெயராம் தான்.
சமீபத்தில் சத்யா, அச்சாயன்ஸ் ஆகிய மலையாள படங்களில் ஜெயராம் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடித்திருந்தார். பொது இடங்களிலும் அதே லுக்கில் தான் வலம் வருகிறார். அஜித்தின் மனைவி ஷாலினியும், ஜெயராமும் அவ்வப்போது ஒன்றாக பேட்மிண்ட்டன் விளையாடுவது விளக்கம். அப்போது இதே லுக்கில் விளையாடிய ஜெயராமை போட்டோ எடுத்த ஷாலினி, அதை அஜித்திடம் காட்டினாராம். மறுநாளே ஜெயராமின் மொபைலுக்கு, “சேட்டா.. என்னை விட உங்களுடைய லுக் தான் பெட்டர்” என மெசேஜ் வந்ததாம். அஜித்தும் ஜெயராமும் 'பரமசிவன்', ஏகன்' ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.