டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ் சினிமா ஒரு தடுமாற்றமான நிலையில்தான் இந்த ஆண்டில் இருந்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை வரையில் 83 படங்கள் வெளியாகியுள்ளன. இவற்றில் 'பாகுபலி 2' படத்தைத் தவிர குறிப்பிட்டுச் சொல்லும்படியான வெற்றிப் படங்கள் என எதுவுமே இல்லாதது ஆச்சரியமான ஒன்று. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட “பைரவா, சி3, காற்று வெளியிடை, கடம்பன்” ஆகிய படங்கள் கூட தோல்விப் படங்களின் பட்டியலில்தான் இடம் பிடித்தது.
இந்த ஆண்டில் இதுவரை பெரிய வெற்றி என்று நேரடி தமிழ்ப் படங்கள் ஒன்றைக் கூட பட்டியலிட முடியாது. 'பாகுபலி 2' படம் கூட ஏறக்குறைய டப்பிங் படம்தான். இப்படி ஒரு மோசமான நிலைமை வேறு எந்த ஆண்டிலும் வந்ததேயில்லை. அடுத்து வெளிவர இருக்கும் பெரிய ஹீரோக்களின் படங்கள்தான் தமிழ் சினிமாவைக் காப்பாற்ற வேண்டும். ஆகஸ்ட் மாதத்தில்தான் பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியாக இருக்கின்றன.
அதற்கு முன்னதாக இந்த ஜுன் மாதத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சில படங்கள் வெளிவர உள்ளன. செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா நடித்துள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை', ஜெயம் ரவி நடித்துள்ள 'வனமகன்', சிம்பு நடித்துள்ள 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' ஆகிய மூன்று படங்களும் ஜுன் 23ம் தேதி வெளிவர உள்ளன. ஜுன் 26ம் தேதி ரம்ஜான் வர இருப்பதால் நான்கு நாட்களில் படத்தின் வசூலை அள்ளிவிட வேண்டுமென இப்படங்களின் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். அதனால், ஜுன் 23ம் தேதி இந்த மும்முனைப் போட்டி கடுமையாகவே இருக்கும்.