பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தெலுங்குத் திரையுலகில் மற்ற எந்த நடிகர்களுக்கும் இல்லாத ஒரு வரவேற்பு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு உண்டு. அவர் நடித்து வெளிவரும் தெலுங்குப் படங்கள் மலையாள மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக லாபகரமான வசூலைத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கிறது.
நல்ல நடனத் திறமையுடன், ஆக்ஷ்ன் காட்சிகளிலும் அசத்தும் அல்லு அர்ஜுனுக்கு ஹிந்தியிலும் சமீப காலமாக வரவேற்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக அவர் நடித்து வெளிவந்த தெலுங்குப் படங்கள் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு யு டியூபில் அதிகாரப்பூர்வமாக பதிவேற்றப்பட்டுள்ளன. அந்தப் படங்கள் தொடர்ந்து நல்ல வரவேற்புடன் கோடிக்கணக்கான பார்வைகளையும் பெற்று வருகின்றன.
குறிப்பாக அவர் நடித்த 'சர்ரைனோடு' படம் 2 கோடியே 80 லட்சம் பார்வைகளையும், 'சன் ஆப் சத்தியமூர்த்தி' 3 கோடியே 20 லட்சம் பார்வைகளையும் பெற்றுள்ளது.
அஜித் நடித்த 'வேதாளம்' படத்தை 1 கோடியே 22 லட்சம் பேர் மட்டுமே பார்த்துள்ளனர். ஹிந்தி டப்பிங் படங்கள் மூலம் யு டியூபைப் பொறுத்தவரையில் அஜித்தை விட அல்லு அர்ஜுனே முன்னிணியில் உள்ளார்.